×

நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க ஆணை

நெல்லை, மார்ச் 27: நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கான ஆணைகளை விண்ணப்பதாரர்களுக்கு கலெக்டர் சுகுமார் வழங்கினார். நெல்லை மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது. அதனடிப்படையில், 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கு தலா ஒரு விண்ணப்பம் மட்டும் வரப்பெற்றதால் அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் 9 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் சுகுமார் கடந்த 21ம்தேதி வழங்கினார்.

இதைதொடர்ந்து மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சுகுமார் முன்னிலையில் 180 விண்ணப்பங்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட 19 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்குவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (நெல்லை) சரவணன், மோட்டார் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நெல்லை மாவட்டத்தில் 19 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Nellai district ,Nellai ,Collector ,Sukumar ,Regional Transport Office ,Nellai district.… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை