- சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் கண்காட்சி
- தர்மபுரி
- மாவட்டம்
- கலெக்டர்
- சதீஷ்
- தர்மபுரி மாவட்டம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம்
தர்மபுரி, மார்ச் 27: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்புரி மாவட்ட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தும் பொருட்டு, மொத்த கொள்முதலாளர்களிடம் விற்பனை செய்ய ஏதுவாக மாவட்ட அளவிலான விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான சந்திப்பு கூட்டம் இன்று (27ம்தேதி) தர்மபுரி குமாரசாமி பேட்டை, செங்குந்தர் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத்திலுள்ள 10 வட்டாரங்கள், நகராட்சி, அனைத்து பேரூராட்சிகளிலுள்ள சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களான சிறுதானியங்கள், சணல் பைகள், ஊறுகாய் வகைகள், மசாலா வகைகள், தேன் மதிப்பு கூட்டு பொருட்கள், எண்ணெய் வகைகள், துணி வகைகள், சோப்பு வகைகள் மற்றும் உலர் கருவாடு போன்ற 100க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்நிகழ்வில் பங்குபெற விரும்பும் சுயஉதவிக்குழுக்கள், தங்கள் பொருட்களுடன் கலந்து கொள்ளவும், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்களை கொள்முதல் செய்ய விருப்பம் உள்ள வணிகர்கள், தவறாமல் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள் கண்காட்சி appeared first on Dinakaran.
