×

திற்பரப்பு மஹாதேவர் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நாகர்கோவில், மார்ச் 27: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திற்பரப்பு  மஹாதேவர் கோயில். இந்த கோயில் பங்குனிதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் பள்ளி உணர்த்தல், தொடர்ந்து கணபதி ஹோமம், திருவிழா கொடியேற்றம் ஆகியவை நடந்தது. தந்திரி பிரம்மஹ சஜித் சங்கரநாராயணரு கொடியேற்றி வைத்தார். மதியம் அன்னதானம், மாலையில் லட்சதீபம், விசேஷ பூஜையுடன் தீபாராதனை, இரவில் அத்தாழபூஜை ஆகியவை நடந்தது. கோயில் திருவிழா வருகிற 4ம் தேதி வரை நடக்கிறது.

திருவிழாவில் தினமும் காலை 5 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5.15 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து நிர்மால்ய பூஜை, 5.45 மணிக்கு கணபதிஹோமம், 6.30 மணிக்கு உஷபூஜை, தொடர்ந்து உஷ சிவேலி, 9 மணிக்கு மிருத்யுஞ்சயஹோமம், 9.30 மணிக்கு  பூதபலி எழுந்தருளல், 11 மணிக்கு உச்சகால பூஜை, கலசாபிஷேகம், பகல் 12 மணிக்கு சிவேலியுடன் நடையடைப்பு, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6.45 மணிக்கு லட்சதீபம், விசேஷ பூஜையுடன் தீபாராதனை, இரவு 8 மணிக்கு அத்தாழபூஜை, 8.30 மணிக்கு  பூதபலி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

The post திற்பரப்பு மஹாதேவர் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Thirparappu Mahadeva Temple Panguni Festival ,Nagercoil ,Kumari district ,Thirparappu  Mahadeva Temple ,Panguni ,Ganapati Homam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை