புதுடெல்லி: பீகார் சட்ட பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கிறது. இதை தொடர்ந்து அடுத்தாண்டு மேற்கு வங்கம், அசாம்,கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுவையில் சட்ட பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் வாக்குசாவடி பூத் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பீகார், மேற்கு வங்கம் மற்றும் அசாமை சேர்ந்த பூத் அதிகாரிகளுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நேற்று டெல்லியில் நடந்தது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார் பூத் அதிகாரிகளுக்கான பயிற்சியை தொடங்கி வைத்தார்.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
The post நாடு முழுவதும் ஒரு லட்சம் பூத் அதிகாரிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.
