கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே கொரசினம்பட்டியை சேர்ந்தவர்கள் பத்மநாபன் (18) மற்றும் 17 வயது சிறுவன். இவர்கள் நேற்று முன்தினம் மாலை டூவீலரில் கோபால்பட்டி சென்று விட்டு பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி கொண்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். டூவீலரை பத்மநாபன் ஓட்ட, சிறுவன் பின்னால் அமர்ந்து கொண்டு பெட்ரோல் கேனை கையில் பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.
நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற சிறுவன் மீது டூவீலர் மோதியது. அப்போது பெட்ரோல் கேன் கீழே விழுந்து தீப்பற்றியதில் தீ, டூவீலர் மீதும் மற்றும் பத்மநாபன், பின்னால் அமர்ந்த சிறுவன் மீதும் பற்றி கொண்டது. தீக்காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பத்மநாபன் உயிரிழந்தார். குறுக்கே வந்த சிறுவன் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
The post பைக்கில் கொண்டு சென்ற பெட்ரோல் தீப்பிடித்து உடலில் பற்றி வாலிபர் சாவு appeared first on Dinakaran.
