×

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு திடீர் டெல்லி பயணம்: நாளை அமித்ஷாவை சந்திக்க திட்டம்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றும் வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார்.. டெல்லி செல்லும் அண்ணாமலை நாளை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

The post தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று இரவு திடீர் டெல்லி பயணம்: நாளை அமித்ஷாவை சந்திக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Annamalai ,Delhi ,Amitsha ,Chennai ,Secretary General ,Opposition Leader ,Edapadi Palanisami ,MINISTER ,AMITSHAW ,Tamil ,
× RELATED அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து...