×

சட்ட விரோதமாக குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்த 3 பேர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறியும் சட்ட விரோத செயலை செய்துவந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை 55 கிலோமீட்டர் பின் தொடர்ந்து வேப்பூர் காவல்துறை மடக்கிப் பிடித்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.காரில் ஸ்கேனர் வைத்துக் கொண்டு கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சட்ட விரோதமாகக் கண்டறியும் செயலை செய்துவந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியது. வேப்பூர் அரசு தலைமை மருத்துவர் அகிலன் வேப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொணடர்.

The post சட்ட விரோதமாக குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்த 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Veppur ,
× RELATED சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!