டெல்லி: மார்பைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமை அல்ல என்ற அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. “இந்த கருத்துகள் நீதிபதியின் திறன் குறைபாட்டை காட்டுகிறது. ஒரு நீதிபதிக்கு எதிராக, இப்படி சொல்வதற்கே வேதனையாக இருக்கிறது” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், ஏ.ஜி. மாஷிஹ் கருத்து தெரிவித்துள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், உத்திரபிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதிமன்ற அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
இத்தைகைய தீர்ப்பை எழுதிய நீதிபதியின் திறன்குறைபாட்டை இந்த தீர்ப்பு வெளிச்சம் போட்டு காட்டுகிறது எனவும் நீதிபதி இதுபோன்ற தீர்ப்பு வழங்குவது மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீர்ப்பு சட்ட கோட்பாடுகளுக்கு எதிராகவும், மனிதாபமற்ற அணுகுமுறையை சித்தரிப்பதாகவும் தெரிய்வத்துள்ளனர்.
அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிப்பதுடன் தீர்ப்பு குறித்து விரிவான பதிலளிக்க வேண்டும் என்ற உத்தரவையும் ஒன்றிய அரசுக்கும், உத்திரபிரதேச மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. சிறுமிக்கு நிகழும் வன்கொடுமையை தடுப்பதுதான் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர அதனை விட கூடுதல் வேதனையை ஏற்படுத்த கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பிற்கு எதிராக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை மேற்கொண்டது. விசாரணையின்போது அலகாபாத் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
The post பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.
