×

பெண்கள், குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்

 

பெரம்பலூர், மார்ச் 26: பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவின் சார்பில் செங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், பெரம்பலூர் சார்பு நீதிபதி யுமாகிய மகேந்திரா வர்மா தலைமை வகித்து பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உள்ளடக்கியே அனைத்து சட்டங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதில் இந்தியாவில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தில் பெண்களுக்கான சிறப்பு சட்டம், பெண் குழந்தைகளுக்கான சட்டம், குடும்ப வன்முறைசட்டம், குழந்தை திருமண தடைச் சட்டங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

மேலும் சட்ட விழிப்புணர்வு முகாமில் தலைமை சட்ட பாதுகாப்பு வழக்கறிஞர் சிராஜுதீன் மற்றும் சட்ட பாதுகாப்பு உதவி வழக் கறிஞர் தினேஷ் மற்றும் இந்தோ அறக்கட்டளை செல்வகுமார் ஆகியோர் பேசினர். முன்னதாக பள்ளி வளாகத்தில் செங்குணம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சிவானந்தம் முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. முன்னதாக சிவம் அறக்கட்டளை நிறுவனர் சிற்றம்பலம் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் உதிரம் நண்பர் கள் குழுவின் சார்பில் செங்குணம் குமார் அய்யாவு நன்றி கூறினார்.

The post பெண்கள், குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Sengunam Government High School ,Perambalur District Legal Services Commission ,Perambalur District Legal Services Commission… ,Dinakaran ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...