×

அக்காள், தம்பி கைது ரயிலில் கடத்தி சென்ற புகையிலை பறிமுதல்

விருதுநகர், மார்ச் 25: கோவை ரயிலில் தமிழக அரசால் நடை செய்யப்பட்ட 5 கிலோ புகையிலையை கடத்திய அக்கா மற்றும் தம்பியை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விருதுநகர் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கார்த்தி ரகுநாத் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு வண்டியில் சோதனை செய்தனர். அந்த ரயிலில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தனர்.
அதில், சுமார் 50 கிலோ அளவிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

The post அக்காள், தம்பி கைது ரயிலில் கடத்தி சென்ற புகையிலை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Tamil Nadu government ,Coimbatore ,Assistant Inspector ,Karthi Raghunath ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை