×

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், மார்ச் 26: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்து, நகர்மன்ற தலைவர் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில், நெல்லை மண்டலம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள்-2019 சார்பில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் புதிய கட்டுமானம் நடைபெறும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு பற்றி நகர் பதிவு செய்யப்பட்ட பொறியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிகழ்வில், நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி, நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர், நகராட்சி துணைப்பொறியாளர் நாகராஜன், நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் சந்திரா, தண்ணீர் மேற்பார்வையாளர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur Municipality ,Srivilliputhur ,Council ,Virudhunagar district ,Nellai Mandal ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு