×

கலெக்டரிடம் மனு

தேனி, மார்ச் 26: தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேனி மாவட்ட வைகை டிராக்டர், டிப்பர், ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தலைமையில் ஏராளமானோர் வந்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இம்மனுவில், தேனி மாவட்டத்தில் ஜல்லி கிரசர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவில் உள்ளதால் ஜல்லி எம்-சாண்ட் தட்டுப்பாடு உள்ளது. எனவே எம்சாண்ட் ஜல்லி ஏற்றி செல்லும் வாகனங்கள், ஓட்டுநர்கள் மீது வருவாய்த் துறையினர் வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். தேனி மாவட்டத்தில் தேவைக்கேற்ப கிரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.

The post கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Tipper Lorry Owners Association ,Theni District Collector ,Theni District Vaigai Tractor ,Tipper ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை