×

மனித, வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு

 

பந்தலூர், மார்ச் 26: பந்தலூரில் வனத்துறை சார்பில் மனித, வனவிலங்கு மோதல் மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம், தேவாலா வனச்சரகம் சார்பில் வனவிலங்குகள் மனித மோதலை தடுப்பது குறித்தும், வனப்பகுதியில் தீ ஏற்படாமல் பாதுகாப்பது குறித்து விவழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அதியமான் கலை குழு சார்பில் ஆட்டம் பாட்டத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வனவிலங்குகள் பாதுகாப்பு, வனவிலங்குகள் மனித மோதல்கள் ஏற்படாமல் தடுப்பது, வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து, நாடுகாணி பொன்னூர், கூவமூலா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வில் தேவாலா வனச்சரகம் ரேஞ்சர் சஞ்சீவி, வனவர் சுரேஷ் மற்றும் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.

The post மனித, வனவிலங்கு மோதல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Forest Department ,Nilgiris District ,Gudalur Forest Reserve ,Devala Forest Department ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி