×

அமராவதியில் அமையும் விளையாட்டு நகரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட ஐசிசி ஒப்புதல்: 1.32 லட்சம் இருக்கைகள் கொண்டது

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உலகிலேயே தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக அமராவதி தலைநகரை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிநவீன தொழில்நுட்பத்துடன் சகல வசதிகளுடன் கூடிய தலைநகரை திட்டமிட்டு அதற்கு ஏற்ப உருவாக்க வேண்டும் என பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமராவதியில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. 1.32 லட்சம் இருக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை கட்டுவதற்கு ஐ.சி.சி(இன்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில்) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அமராவதியில் 200 ஏக்கரில் அமைய உள்ள விளையாட்டு நகரத்தின் ஒரு பகுதியாக இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமராவதியில் அமையும் விளையாட்டு நகரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட ஐசிசி ஒப்புதல்: 1.32 லட்சம் இருக்கைகள் கொண்டது appeared first on Dinakaran.

Tags : ICC ,India ,Amaravati Sports City ,Tirumala ,Andhra Pradesh ,Chief Minister ,Chandrababu Naidu ,Amaravati ,Dinakaran ,
× RELATED கேரளாவின் வயநாடு பகுதியில் கோயில்...