×

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துள்ளார். ஜி.கே.வாசனின் எம்.பி. பதவி காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையவுள்ளது. எனவே தற்போதே ராஜ்யசபா எம்.பி. பதவியை மீண்டும் பெற ஜி.கே.வாசன் காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் இன்று பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ராஜ்யசபா சீட் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மற்றொரு தரப்பில் த.மா.க.வை பாஜகவில் இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலையும் உறுதிப்படுத்தாத ஜி.கே.வாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; இன்று டெல்லியில், பாராளுமன்ற அலுவலகத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு என பதிவிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருக்கும் சூழலில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை ஜி.கே.வாசன் சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

The post டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Interior Minister ,Amitshah ,G. K. Vasan ,Amitsha ,Tamil State Congress ,President ,G. K. Vasanin M. B. ,Rajyasaba M. B. ,G. K. Vasan Kai ,G ,Delhi. ,K. Vasan ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலப் பள்ளிகளில் முதல்...