×

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு

சிவகங்கை: கீழடி அரசு அருங்காட்சியகத்தை திரைப்பட நடிகர் வடிவேலு பார்வையிட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை திரைப்பட நடிகர் வடிவேலு நேற்று மாலை நேரில் பார்வையிட்டார். ஆறு கட்டிட தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரிய பொருட்களை பார்த்து ரசித்தார். அவருடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:
இவ்வளவு சிறப்பு பெற்ற அருங்காட்சியகத்தை நான் இத்தனை நாட்களாக பார்க்காமல் இருந்ததை நினைத்து வருந்துகிறேன். இங்கு அரிய தொல்லியல் பொருட்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்படுகிறது. தமிழர்களின் பெருமை, பண்பாட்டை விளக்கும் அடையாளமாக உள்ளது. அருங்காட்சியகத்தை தொல்லியல் அலுவலர்கள் சிறந்த முறையில் பராமரிக்கின்றனர். அவர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு வடிவேலு கூறினார்.

The post கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் வடிவேலு appeared first on Dinakaran.

Tags : Actor Vadivelu ,Keezhadi Museum ,Sivaganga ,Vadivelu ,Keezhadi Government Museum ,Keezhadi ,Thiruppuvanam ,Actor ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...