- தஞ்சாவூர்
- நகராட்சி ஆணையர்
- கண்ணன்
- நகராட்சி நல அலுவலர்
- நமச்சிவாயம்
- சுகாதார ஆய்வாளர்
- ராமச்சந்திரன்
- தின மலர்
தஞ்சாவூர், மார்ச்25: தஞ்சாவூர் பேருந்து நிலைய பகுதிகளில் இரவு நேர கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட இரவு நேர கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது இரவு நேரங்களில் குப்பைகளை யாராவது பொது இடத்தில் கொட்டுகிறார்களா?என கண்காணிக்கப்பட்டது. அவ்வாறு கொட்டியவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், குப்பைகளை வெளியில் கொட்டாமல், கடையில் சேகரித்து வைத்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டது. அதையும் மீறி குப்பைகளை பொது இடத்தில் கொட்டினால் கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
The post பேருந்து நிலைய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.
