×

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

 

மயிலாடுதுறை, மார்ச் 24: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவதை தவிர்த்து காலமுறை ஊதியத்தில் பணி அமர்ந்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மதுரை உயர்நீதிமன்றத்தில் போராட்டத்திற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், செல்வம், சண்முகசுந்தரம், அன்பரசன், ஆதீஸ்வரன் கூட்டத்தலைமையில் உண்ணாவிரதம் ஈடுபட்டனர். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து மாவட்ட செயலாளர் பழனிவேல், ஜாக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கலா உட்பட பலர் கோரிக்களை வலியுறுத்தி பேசினர். ஆசிரியர்கள், வருவாய்த்துறை, அரசு ஊழியர்களின் அனைத்துத்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 700க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

The post மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara Collector's Office ,Jacto-Geo ,Mayiladuthura ,Jacto-Geo Organized Fasting ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை