×

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏப்.7ல் மகா கும்பாபிஷேகம்

 

ஏப்.3ம் தேதி யாகசாலை பூஜை தொடக்கம் தென்காசி, மார்ச் 24: தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் ஏப்ரல் மாதம் 7ம் தேதி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி ஏப்.3ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. கடந்த 15ம் நூற்றாண்டில் தென்காசி பகுதியை ஆண்ட பராக்கிரமபாண்டிய மன்னரால் வடக்கே கங்கை கரையில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் தெற்கில் உள்ளவர்களும் தரிசிக்கும் வண்ணம் தென்காசி சிற்றாற்றின் கரையில் காசி விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. திருப்பணிகள் நடைபெற்று 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகா மண்டபம், பிரகார மண்டபம், கொடிமரம், மாடமதில், ராஜகோபுரம், விமான கோபுரங்கள், சுதை வேலை, பஞ்சவர்ணம் பூசுதல், ஸ்தூபி ஸ்தாபனம், தீர்த்தக்குளம் என பல்வேறு திருப்பணிகள் புனரமைக்கப்பெற்று ஏப்ரல் மாதம் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

The post தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஏப்.7ல் மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Maha Kumbabhishekam ,Tenkasi Kasi Vishwanathar Temple ,Yagasalai Puja ,Tenkasi ,Ashta Bandhana Maha Kumbabhishekam festival ,Tenkasi Kasi Vishwanathar Swamy Temple ,Kumbabhishekam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை