×

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு வானவியல் பயற்சி

 

கோவில்பட்டி, மார்ச் 24: தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி பாரதி நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வானவியல் குறித்த செயல்விளக்க பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியை ராணி தலைமை வகித்தார். மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு தொலைதூரப் பொருட்களை தொலைநோக்கி மூலம் பார்வையிடுவது குறித்தும், வானவியல் பற்றியும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். மாணவர்கள் பங்கேற்று தொலைதூர பொருட்களை தொலைநோக்கியில் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post கோவில்பட்டியில் மாணவர்களுக்கு வானவியல் பயற்சி appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Bharathi Nagar ,Municipal Middle School ,Thoothukudi District Astro Club ,Headmistress ,Rani ,District Astro Club ,Muthu… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை