×

சிவகங்கையில் காங். ஆலோசனை கூட்டம்

 

சிவகங்கை, மார்ச் 24: சிவகங்கையில் மானாமதுரை மற்றும் சிவகங்கை சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் நகர், கிராம, வார்டு கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம்பி கார்த்தி சிதம்பரம் கமிட்டி அமைப்பது பற்றி ஆலோசனை வழங்கி பேசினார்.

இதில் மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சோணை, ஜான்பால் நல்லதுரை, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், வட்டாரத் தலைவர்கள் மதியழகன், உடையார், வட்டார பொறுப்பாளர்கள் பாண்டிவேல், பாட்டம் சிவா, சோமசுந்தரம், செல்லப்பாண்டி, நகர் தலைவர்கள் விஜயகுமார், புருஷோத்தமன், குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜீவ் பாரமலை, நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் காங். ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Sivaganga ,Manamadurai ,Karthi Chidambaram ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை