×

ஒட்டன்சத்திரம் கொல்லபட்டியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 24: ஒட்டன்சத்திரம் அருகே கொல்லப்பட்டியில் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் தேன்மொழி, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தானர்.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவிகள் கொல்லப்பட்டி பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அதற்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கினர். மேலும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் ஒருங்கிணைப்பு பணிகளை வேதியியல் துறை உதவி பேராசிரியர்கள் கவுசல்யா, ராமப்பிரியா செய்திருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் கொல்லபட்டியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Manjapai ,Ottanchathiram Kollapatti ,Ottanchathiram ,Shakti Women's Arts and Science College ,Kollapatti ,College Principal ,Vempanan ,Principal ,Thenmozhi ,Panchayat ,Arumugam ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை