×

மாஜி எஸ்ஐ கொலை மேலும் ஒருவர் கைது

நெல்லை: நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் பிஜிலி (60), கடந்த 18ம்தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கார்த்திக், அக்பர்ஷா சரணடைந்தனர். முகமது தவுபிக்கை போலீசார் சுட்டுப் பிடித்தனர். கேரளாவில் பதுங்கியுள்ள நூருநிஷாவை தேடி வருகின்றனர். இந்நிலையில் முகம்மது தவுபிக்கின் உறவினரான 11ம் வகுப்பு மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் பயன்படுத்திய பைக் நூருநிஷாவின் மற்றொரு சகோதரர் பீர்முகமது(37) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து ேநற்று போலீசார் பீர்முகம்மதுவை கைது செய்தனர்.

The post மாஜி எஸ்ஐ கொலை மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Maji Si ,Nella ,Zaghir Hussain Bijli ,Nellai ,Kartik ,Akbarsha ,MOHAMED DAUBIK ,Nurunisha ,Kerala ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...