திருவாரூர், மார்ச் 23: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக வரும் 26 மற்றும் 27 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாய் மாற்று பாதையில் பதிக்கும் பணி காரணமாக வரும் 26 மற்றும் 27 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post மார்ச் 26, 27ம் தேதி வேதாரண்யம் கூட்டு குடிநீர் விநியோகம் 2 நாள் நிறுத்தம் appeared first on Dinakaran.
