×

வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

சென்னை: நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும். மேலும் தெளிவுபடுத்த வேண்டியது கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது.

தென்மாநிலங்களின் தொகுதி குறைப்பு பா.ஜ.வின் ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும். ஏற்கனவே நம் கலாச்சாரத்திலும், நம் மொழிக் கொள்கையிலும் தலையிடும் ஒன்றிய பா.ஜ. தற்போது நம் பிரதிநிதித்துவத்திலும் தலையிடுகிறது. இது அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டிய மிக முக்கியமான ஆபத்து. இந்த வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

The post வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : MK Stalin ,Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Chennai ,Joint ,Action Committee ,India ,Dinakaran ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!