- குந்தாஸ்
- Sholingar
- துர்கா பிரசாத்
- சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
- ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர்...
சோளிங்கர்: தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பகுதி நேர ஆசிரியரை போலீசார் குண்டாசில் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபிரசாத் (20). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பள்ளியில் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சோளிங்கர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் ஆசிரியர் துர்காபிரசாத்தை போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் துர்கா பிரசாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி கலெக்டர் சந்திரகலாவுக்கு, எஸ்பி விவேகானந்த சுக்லா பரிந்துரை செய்தார். அதன்பேரில் துர்காபிரசாத்தை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள துர்கா பிரசாத்திடம் வழங்கப்பட்டது.
The post மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.
