×

துணை மின் நிலையத்தில் பயங்கர தீ லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

லண்டன்: துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லண்டனில் உள்ள ஹீ்த்ரு விமான நிலையம், உலகின் மிக பரபரப்பான விமான நிலையம் என கருதப்படுகிறது. விமான நிலையம் அருகே உள்ள மின்சார துணை மின்நிலையத்தில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின்சாரம் விநியோகம் தடைப்பட்டு, விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கான மின் சேவை தடைபட்டுள்ள காரணத்தால் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு என அனைத்து சேவைகளும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹீத்ரோவில் இருந்து புறப்படும் மற்றும் வரும் 1350 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹீத்ரோவுக்கு வரும் விமானங்கள் லண்டனுக்கு வெளியே உள்ள கட்விக் விமான நிலையம், பாரீசில் உள்ள சார்லஸ் டி கல்லே விமான நிலையம், அயர்லாந்தின் ஷன்னான் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தீயில் சேதமடைந்த மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மின்சார விநியோகம் மீண்டும் தொடங்கினாலும் விமான நிலையத்தின் வழக்கமான பணிகள் இயல்பு நிலைக்கு வருவதற்கு பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

The post துணை மின் நிலையத்தில் பயங்கர தீ லண்டன் விமான நிலையம் தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : London Airport ,London ,Heathrow Airport ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை...