×

தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையம்

 

தரங்கம்பாடி, மார்ச் 21: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார கட்டிடத்தை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 15வது நிதி குழுவின் கீழ் ரூ.35 லட்சம் செலவில் எருக்கட்டாஞ்சேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகளை நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் ஒப்பந்த கால கெடுவிற்குள் பணியினை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், இளநிலை பொறியாளர் மோகனகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

The post தரங்கம்பாடி பேரூராட்சியில் ரூ.35 லட்சம் செலவில் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையம் appeared first on Dinakaran.

Tags : Primary Health ,Center ,Tharangambadi Town Panchayat ,Tharangambadi ,Mayiladuthurai District ,Collector ,Srikanth ,15th Finance Commission ,Erukkatanchery ,Primary Health Center ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை