நித்திரவிளை, மார்ச் 21: தூத்தூர் புனித யூதா கல்லூரியில் இயங்கி வரும் மகளிர் மேம்பாட்டு மன்றம் சார்பில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் நடனப் போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் ஒப்பனைக் காட்சிப்போட்டி போன்ற போட்டிகளுடன் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மகளிர் தின விழாவில் கல்லூரி நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்ற நீதிபதி பிரபுதாஸ் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஆன்லெட் முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் நல்லாசிரியர் ரேணுகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் கல்லூரி மாணவிகள் ஆர்டிசியா ஆங்கில மேல்நிலைப்பள்ளி செயலாளர் லில்லி கிளாடிஸ் மற்றும் தூத்தூர் பயஸ் லெவன்த் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மேரி கிறிஸ்டா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெண்கள் மேம்பாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேரி அறிக்கை வாசித்தார். விழா முடிவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
The post புனித யூதா கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.
