- செய்தூ அம்மாள் கல்லூரி
- ராமநாதபுரம்
- செய்தூ அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை
- டாக்டர்
- பாலகிருஷ்ணன்
- உதவி பேராசிரியர்
- சுந்தர பாண்டியன்
- தின மலர்
ராமநாதபுரம், மார்ச் 20: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறையில் பண்பாட்டு நோக்கில் தமிழியல் தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை ஏற்றுத் தொடங்கி வைத்தார். உதவிப்பேராசிரியர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். நோக்கவுரையினை தமிழ்த்துறையின் தலைவர் கோபிநாத் ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ், ராமநாதபுரம் கம்பன் கழக நிறுவனர் தமிழ்ச்செம்மல் சுந்தரராசன் பேசினர். பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் ஆய்வுக் கோவை நூல் வெளியிடப்பட்டது.
தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் அறிவியல் கல்லூரி, ஆசிரியர்களும் ராஜா கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களும், ராமேஸ்வரம் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கல்லூரி ஆசிரியர்களும், மற்றும் ராமநாதபுர மாவட்ட தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். 500 மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். உதவி பேராசிரியர் சரிதாராணி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளைக் கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது,மேற்பார்வையாளர் சபியுல்லா செய்திருந்தனர்.
The post செய்யது அம்மாள் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் appeared first on Dinakaran.
