×

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை போக்சோ கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி, மார்ச் 20: போக்சோ வழக்கில் தொடர்புடையவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு சாலையில் நின்றிருந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் எட்டயபுரம் தாப்பாத்தி பகுதியை சேர்ந்த முருகையா மகன் சுஜீவன் (எ) சந்தோஷ் (26) என்பவரை குழந்தை கடத்தல் சட்டபிரிவு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுரேஷ் விசாரித்து சுஜீவன் (எ) சந்தோஷ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

The post 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை போக்சோ கோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO court ,Thoothukudi ,POCSO ,Ettayapuram ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்