- தூத்துக்குடி
- பள்ளி
- கிங் ஆஃப் கிங் சிபிஎஸ்இ பள்ளி
- புதூர் பாண்டியபுரம், தூத்துக்குடி
- சோபுகை கோஜூரியோ…
- தூத்துக்குடி பள்ளி
தூத்துக்குடி, மார்ச் 20: தூத்துக்குடி கிங் ஆப் கிங் சிபிஎஸ்இ பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் அமைந்துள்ள கிங் ஆப் கிங் சிபிஎஸ்இ பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையின் கீழ் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் முத்துராஜா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த கராத்தே பட்டயத் தேர்வில் கிங் ஆப் கிங்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஹாரோன், கிருத்திகா, முத்து ஷாலினி, ரியா செர்லின், தேன்மொழி, கனிஷா, அபிநவ், சஞ்சனா, வின்சியா, மோனிஷா, மோஷிகா, தீக்ஷிதா, மகிலேஷ் ஆகியோர் பட்டய தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் கிங்ஸ்டன் பால்ராஜ் மாணிக்கம், பள்ளியின் முதல்வர் ஜூலியா க்ரேனாப் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கராத்தே துணை தலைவர் பாலாஜி செய்திருந்தார்.
The post தூத்துக்குடி பள்ளியில் கராத்தே பயிற்சி முகாம் appeared first on Dinakaran.
