×

ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி

ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2-ம் நிலை தேர்வு இன்று நடைபெற இருந்தது. தேர்வு ரத்து செய்யப்படுவதாக மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல ஆயிரம் கி.மீ. கடந்து தேர்வு எழுதச் சென்ற தமிழ்நாடு மாணவர்கள் அலைக்கழிக்கபட்டனர்.

The post ஆர்ஆர்பி தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Telangana ,RRB ,Loco Pilot ,Southern Railway ,Nadu ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்