×

குரவலூர் அரசு பள்ளிக்கு காமராஜர் விருது

 

சீர்காழி, மார்ச் 19: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட குரவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.

காமராஜர் விருது, விருதிற்கான ரூ.25 ஆயிரம் காசோலையையும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குமரவேல் வட்டார கல்வி அலுவலர் நாகராஜன் ஆகியோர் வழங்கினர். இதனை அப்பள்ளியின் ்தலைமை ஆசிரியர் தேன்மொழி பெற்றுக்கொண்டார். பள்ளி சிறந்த பள்ளியாக தேர்தெடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

The post குரவலூர் அரசு பள்ளிக்கு காமராஜர் விருது appeared first on Dinakaran.

Tags : Kuravalur ,Sirkazhi ,Tamil Nadu Primary Education Department ,Kuravalur Panchayat Union Primary School ,Mayiladuthurai district ,Kuravalur Government School ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை