×

கிருஷ்ணகிரியில் வியாசராஜர் ஆராதனை விழா

கிருஷ்ணகிரி, மார்ச் 19: கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீரஆஞ்சநேய ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவன ஆலயத்தில், 12வது ஆண்டாக வியாசராஜர் ஆராதனை விழா நேற்று நடந்தது. ராம ஆஞ்சநேய சேவா ஸமிதி ட்ரஸ்ட், 3வது ஆண்டாக ஆராதனை கமிட்டியினருடன் இணைந்து, நேற்று காலை 9.30 மணிக்கு வேத பாராயணம், பஞ்சாமிர்த அபிஷேகம், 10.30 மணிக்கு ஆச்சார்யாரால் உபன்யாசம் நடைபெற்றது. பகல் 11.30 மணிக்கு புதுப்பேட்டை வீரஆஞ்சநேய பஜனா மண்டலியினரின் பஜனை நிகழ்ச்சியும், 12 மணிக்கு பல்லக்கு உற்சவமும், தீர்த்தப்பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணகிரியில் வியாசராஜர் ஆராதனை விழா appeared first on Dinakaran.

Tags : Vyasaraja Aradhana Festival ,Krishnagiri ,Sitarama Veera Anjaneya Raghavendra Swamy Vrindavan Temple ,Palayapet, Krishnagiri ,Rama Anjaneya Seva Samiti Trust ,Aradhana Committee ,Vyasaraja Aradhana Festival in ,
× RELATED குவாரி, ஜல்லி கிரஷர்களால் மக்கள் பாதிப்பு