×

கஞ்சா வைத்திருந்தவர் கைது

மண்டபம், மார்ச் 19: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்த போவதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், மண்டபம் கடலோரப் பகுதியில் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது வேதாளை தென் கடலோரப் பகுதி அருகே பார்சலுடன் ஒருவர் இருந்துள்ளார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் வேதாளை பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் ரவி எனவும், இலங்கைக்கு கடத்துவதற்காக 2 கிலோ கஞ்சா பார்சல் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Mandapam police station ,Sri Lanka ,Ramanathapuram district ,Vedalai South… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை