தேவதானப்பட்டி, மார்ச் 19: தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி சாவடி தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் வெற்றி (40). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று தற்போது வீட்டில் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் போன் பேசிக்கொண்டிருந்த வெற்றி நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.நீண்ட நேரம் கணவர் வராததால் அவரது மனைவி அருள்மொழி (35) தேடிப் பார்த்துள்ளார். அப்போது வீட்டின் அருகே வெற்றி மயங்கி நிலையில் கிடந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் போன் செய்து அவர்கள் வந்து பார்த்தபோது வெற்றி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
The post மாடியில் இருந்து தவறி விழுந்த மாஜி ராணுவ வீரர் சாவு appeared first on Dinakaran.
