- பள்ளி ஆண்டு விழா
- Thiruppuvanam
- திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- கழுகெர்கடாய்
- மாவட்டக் கல்வி
- லதாதேவி
- பால்பாண்டி
- மாவட்ட அபிவிருத்தி அலுவலர்
- ராஜா
திருப்புவனம், மார்ச் 19: திருப்புவனம் அருகே கழுகேர்கடையில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி, பால்பாண்டி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை சாந்தி வரவேற்றார். கழுகேர்கடை பொதுமக்கள், ஜமாத்தார்கள் வந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஆசிரியர்கள் விஜயராணி, அமலஜென்சி, திலகவதி, ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர்கள் வளனரசு, கண்ணன், சுந்தரராமன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
The post பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.
