தூத்துக்குடி, மார்ச் 19: தூத்துக்குடி ராஜாஜி பூங்காவை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி, நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையை அகலப்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் சேதமடைந்து உள்ளதாகவும், சில பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பேவர் பிளாக் பாதைகள் பழுதடைந்து இருப்பதாகவும் வந்த தகவலையடுத்து டூவிபுரத்தில் உள்ள சங்கரநாராயணன் பூங்கா, பாளை ரோட்டில் உள்ள ராஜாஜி பூங்கா ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜாஜி பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள் நடைபயிற்சி பாதையை அகலப்படுத்தி தருமாறு மேயரிடம் கோரிக்கை வைத்தனர். இதையேற்று அவர் கூறுகையில், ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பேவர் பிளாக் பாதையை அகலபடுத்தவும், விளையாட்டு உபகரணங்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பர்மா காலனி சந்திப்பில் குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பான இடங்களையும் மேயர் ஜெகன்பெரியசாமி பார்வையிட்டார். ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி பொறியாளர் இர்வின் ஜெபராஜ், திமுக அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன், குழாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் ஆய்வு நடைபயிற்சி பாதையை அகலப்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.
