×

ஆல் இன் ஆல் துவையல்

தேவையானவை:

தேங்காய் துருவல் – 1½ கப்,
கொத்தமல்லித் தழை – 1 கப்,
கறிவேப்பிலை – ¼ கப்,
வறுத்த எள் – 3 டேபிள்ஸ்பூன்,
வெங்காய வடகம் – ¼ கப்,
துருவிய வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு ஏற்ப,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
திக்கான புளிக்கரைசல் – 2 டேபிள் ஸ்பூன்,
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

வறுத்துப் பொடிப்பதற்கு:

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
வரமிளகாய் – 4,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
தனியா – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுப்பதற்குக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து கொர கொரப்பாகப் பொடித்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து தனியே வைக்கவும். மீதியுள்ள எண்ணெயில் வெங்காய வடகத்தை வறுத்துத் தனியே வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய்த்துருவல், மல்லித்தழை, வறுத்த எள், கறிவேப்பிலை, வெங்காய வடகம், வெல்லம், உப்பு, புளிக்கரைசல், வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடி அனைத்தையும் சேர்த்து அளவான நீர் விட்டு கெட்டியாக நைஸாக அரைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினைப் போட்டு வதக்கி வைக்கவும்.

The post ஆல் இன் ஆல் துவையல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பொங்கல் சிறப்பு ரெசிபிகள்