×

சாலைமறியலில் ஈடுபட்ட பாஜவினர் கைது

தேனி, மார்ச் 18: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று தேனி மாவட்ட பாஜ தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பாஜவினர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக தேனி&மதுரை சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தேனி போலீசார் ராஜபாண்டியன் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post சாலைமறியலில் ஈடுபட்ட பாஜவினர் கைது appeared first on Dinakaran.

Tags : Bhajvinar ,Theni ,Theni District Collector's Office ,BAJA ,STATE ,PRESIDENT ,ANNAMALAI ,CHENNAI ,TEA COLLECTOR'S ,THENI DISTRICT ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை