- வருஷாபிஷேகம்
- கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில்
- கோவில்பட்டி
- வருஷாபிஷேக விழா
- கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல்
- முருகன்
- கோவில்
- தின மலர்
கோவில்பட்டி, மார்ச் 18: கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் நடந்த வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் 19ம் ஆண்டு வருஷாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், கும்ப பூஜை, சண்முகர் ஜெபம், கணபதி ஹோமம், சண்முகர் காயத்ரி, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. காலை 9.20 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கும்பம் எடுத்து, கோயில் வளாகத்தை சுற்றிக் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, மூலவர் கதிர்வேல் விமானம், மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி ஆகியோர் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவர் கதிர்வேல் முருகன், வள்ளி தேவசேனா கார்த்திகை சுப்பிரமணியர் மற்றும் தெய்வங்களுக்கு 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூஜைகளை ஹரிஹர பட்டர், அரவிந்த் பட்டர் ஆகியோர் செய்தனர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜா, திருப்பதிராஜா, ரவீந்திரன், நிருத்தியலெட்சுமி, திமுக மாவட்ட முன்னாள் துணை தலைவர் சந்திரசேகர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா appeared first on Dinakaran.
