×

குரும்பூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

உடன்குடி, மார்ச் 18: குரும்பூர் அருகேயுள்ள அழகப்பபுரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சமய நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிவாசல் புனரமைப்பு கமிட்டி பொருளாளர் நூஹ் சாகிப் தலைமை வகித்தார். மாணவர் சாகுல்ஹமீது கிராஅத் ஓதினார். முத்தவல்லி சிராஜூதீன், குரும்பூர் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அலாவுதீன், பொருளாளர் சேட் நயினா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஏரல் சேர்மன் கோயில் தக்கார் கருத்தப்பாண்டியன், ஆலந்தலை இருதயராஜா ஆலய பங்குத்தந்தை சில்வெஸ்டர், இமாம் நூர் இஸ்மாயில் மஹ்லரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் ஆழ்வை யூனியன் முன்னாள் சேர்மன் ஜனகர், அழகப்பபுரம் ஊர்த்தலைவர் சுடலைமுத்து கணபதி, ஆழ்வை ஒன்றிய திமுக பிரதிநிதி பாலமுருகன், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சதிஷ்குமார், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ், ஆழ்வை ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயகுமார், நாலுமாவடி பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் ராஜேஷ், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநில காங்., செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், சோலை நட்டார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குரும்பூர் மற்றும் அழகப்பபுரம் முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post குரும்பூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Iftar ,Kurumpur ,Udangudi ,Alagappapuram Muhaidin Andavar Mosque ,Mosque Reconstruction Committee ,Treasurer ,Nooh Sahib ,Sakulham ,Muttavalli Sirajuddin ,Kurumpur… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை