- ஒட்டன்சத்திரம்
- ஒட்டன்சத்திரம் வனப்பகுதி
- காட்டில்
- ரிசர்வ்
- அதிகாரி
- ராஜா,
- வானவர் இளங்கோவன்
- பழனியாண்டவர் கல்லூரி
- பழனி மலை வடக்கு சரிவு காப்பகம்
- ஒட்டன்சத்திரம்…
- தின மலர்
ஒட்டன்சத்திரம், மார்ச் 18: ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி, வனச்சரக அலுவலர் ராஜா, வானவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இப்பணியில் பழனி ஆண்டவர் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர். பழனி மலை வடக்குசரிவு காப்புக்காடு, ஒட்டன்சத்திரம் ஊரகப்பகுதியில் நடைபெற்ற இந்த கணக்கு எடுப்பின்போது பனங்காடை, மயில்தேன்சிட்டு, தேன்பருந்து, மஞ்சள் வாலாட்டி, செந்தலைகிளி, அரசவால், ஈபிடிப்பான், மாங்குயில் உள்ளிட்ட பறவை இனங்கள் கண்டறியபட்டன. ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பின் கடைசி தினத்தில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
The post ஒட்டன்சத்திரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு appeared first on Dinakaran.
