×

பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

பழநி, மார்ச் 18: பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டுமென செம்மொழி தமிழ்ச் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. பழநியில் செம்மொழி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் டாக்டர்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் கோதண்டபாணி, குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுற்றுலா நகரான பழநிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பழநி கோயிலின் 2வது ரோப்கார் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட பழநி&கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். திருட்டு சம்பவங்களை தவிர்க்க போலீசார் இரவு ரோந்துப்பணியை அதிகப்படுத்த வேண்டும். பழநி வழித்தடத்தில் ராமேஷ்வரம், பெங்களூரு, திருப்பதி, கொச்சின் ஆகிய ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பழநி-கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani ,Kodaikanal ,Semmozhi Tamil Sangam ,Dr. ,Ramakrishnan ,Easwaran ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை