×

மேலூரில் பெண்ணை கத்தியால் குத்தி 8 பவுன் சங்கிலி பறித்த கணவன், மனைவி கைது

மேலூர், மார்ச் 18: மேலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி, 8 பவுன் நகைகளை பறித்துச்சென்ற வழக்கில் கணவன், மனைவி நேற்று கைது செய்யப்பட்டனர். லூர் காந்திஜி பூங்கா சாலையில் உள்ள ஸ்டார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம்(65). இவரது மனைவி சாய்லட்சுமி(60). இவர்களின் மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகி வெளிநாடு, மற்றும் வெளியூரில் வசித்து வருகின்றனர். மாணிக்கம் விவசாயத்தில் உழவுக்கு பயன்படும் கொழுக்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 10ம் தேதி காலை வாக்கிங் முடிந்து மாணிக்கம் வீடு திரும்பிய போது சாய்லட்சுமி கழுத்தில் ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதில் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் கத்தியால் சாய்லட்சமியின் கழுத்தில் குத்தி, 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து காயமடைந்த சாய்லட்சுமி மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் கைரேகை பிரிவு இன்ஸ்பெக்டர் கார்த்திக் அங்கு வந்து தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கபட்ட நிலையில், அது குறிப்பிட்ட தூரம் ஒடிவிட்டு நின்றது.. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க டிஎஸ்பி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், மாணிக்கம் வீட்டின் எதிரே வசிக்கும் கார்த்தீபன்(41) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டதும், அவரது மனைவி சங்கீதா(34) உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவான அவர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நேற்று அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து மேலூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு நடத்திய விசாரணையில், மேலூரை அடுத்த நொண்டிகோவில்பட்டியைச் சேர்ந்த கார்த்தீபன் சமீபத்தில் மாணிக்கம் வீட்டின் எதிர்ப்புறம் குடி வந்துள்ளார். சரியான வேலை மற்றும் வருமானம் இல்லாமல் இருந்த அவர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

The post மேலூரில் பெண்ணை கத்தியால் குத்தி 8 பவுன் சங்கிலி பறித்த கணவன், மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Melur ,Manickam ,Star Nagar ,Gandhiji Park Road, Loor ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை