- துறை
- செல்வப்பெருந்தகை
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருப்பதி, குண்டூர்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக நாளை (19ம்தேதி) உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு எழுதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, குண்டூர், காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகர், ஐதராபாத், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் போன்ற நகரங்களிலும் 600 முதல் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவீத விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, தமிழ்நாடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே துறையின் தேர்வுகள் அனைத்தும் தமிழ்நாட்டு மையங்களில் நடத்த வேண்டும்.
The post ரயில்வே துறை தேர்வுக்கு 1000 கி.மீ. தூரத்தில் தேர்வு மையங்கள்: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.
