×

கேரளா, குமரியில் ரூ.600 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. 2017 காலகட்டத்தில் கேரள- தமிழக எல்லையான பளுகலில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா சிட்பண்ட் என்ற நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ஏராளமான மக்கள் இந்த நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்தனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.600 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டது.

இதில் கேரளாவில் இருந்து மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிர்மல் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கேரள முதலீட்டாளர்கள் பாதுகாப்புக்குழு சட்டம் 2019ன் கீழ் கேரள அரசிடம் புகார் அளித்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து நேற்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

The post கேரளா, குமரியில் ரூ.600 கோடி மோசடி: சிபிஐ விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kerala government ,CBI ,Thiruvananthapuram ,Nirmal Krishna Finance Company ,Nirmal Krishna Chit Fund ,Palugal ,Kerala-Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...