×

என் படங்கள் யதார்த்த மீறலா? தியாகராஜன் குமாரராஜா பதில்

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ், மாடர்ன் லவ் வெப்சீரிஸில் ஒரு எபிசோட் ஆகியவற்றை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இவரது படங்கள் யதார்த்தத்தை மீறி இருக்கிறது என தியாகராஜன் குமாரராஜா மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் யதார்த்தத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடிய ஒரு தெருவிளக்கு இவரது படத்தில் நீல நிறத்தில் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுவதுண்டு. இது பற்றி தியாகராஜன் குமாரராஜா கூறியது: சிலருக்கு என்னுடையப் படங்களின் ஒளியமைப்பு இயல்பாகத் தெரியவில்லை. அதுதான் அதன் நோக்கமே. யதார்த்தம் என்கிற ஒரு கருதுகோள் மேல் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. யதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் என்று நீங்கள் சொல்லும் படங்கள் எல்லாமே லைட் செட் செய்து தான் எடுக்கப்படுகின்றன. என்னுடைய படங்களில் நான் அதை சற்று மிகைப்படுத்திக் காட்டுகிறேன்.

அவ்வளவு தான். கூடுதலாக நீங்கள் யதார்த்தத்தில் பார்த்த ஒன்றையே மறுபடியும் நான் ஏன் உங்களுக்கு படத்திலும் காட்ட வேண்டும். அப்படி காட்டினால் அதில் எந்தவிதமான புதிய அனுபவமும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. இதனால்தான் இந்த மாறுபாடு. என் படங்களில் யதார்த்தம் மீறல் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். ஆனால் உலகத்தில் நடக்காத எதையும் நான் காட்டிவிடவில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். என் படங்களை உன்னிப்பாக பார்க்கிறவர்களுக்கு அது புரியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post என் படங்கள் யதார்த்த மீறலா? தியாகராஜன் குமாரராஜா பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Thiagarajan Kumararaja ,Aranya Kantam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்