×

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி ஆசிரியர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி மாணவி பள்ளிக்கு சென்றுள்ளார். அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் மாவடிபுதூரைச் சேர்ந்த மோகன் (54), அந்த மாணவியை பள்ளியில் உள்ள தனது துறை அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடமிருந்து தப்பி அறையை விட்டு வெளியேறினார். இதுகுறித்து மாணவியின் தாயார் நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து உடற்கல்வி ஆசிரியர் மோகனை நேற்று கைது செய்தனர்.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை பி.டி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Kalakkadu ,Mohan ,Mavadiputhur ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...